வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நடித்த நடிகர் வருங்கால முதலமைச்சரா?
மேலுார் அருகே அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில் இருக்கும் 193.215 எக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தளமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தின் முதல் பல்லுயிர் தளமான இங்கு 7 சிறிய குன்றுகள் உள்ளன. இவை 250 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ளது.இதன் காரணமாக இக்கிராம மக்கள் இப்பகுதியை பாதுகாப்பதில் அக்கறை காட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் இப்பகுதி கலுங்கு மலையில் திடீர் வெடிச்சத்தம் கேட்டது. கிராம மக்கள் சென்று பார்த்தபோது 50க்கும் மேற்பட்டோர் பாறையில் துளை போட்டு வெடிவைக்கும் கம்ப்ரஷர், மண் அள்ளும் இயந்திரம், கிரேன் உள்ளிட்ட பொருட்களுடன் நின்றிருந்தனர்.இதுகுறித்து மக்கள் விசாரிக்கவே முத்தையா இயக்கத்தில் இன்பநிதி சினிமா படப்பிடிப்பில் நடிப்பதாகவும், மதுரை எஸ்.பி.,யிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறினர். அதனை ஏற்க மறுத்த மக்கள், பல்லுயிர் தளத்தில் வெடி வைக்கவும், படப்பிடிப்பு நடத்தவும் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி அவர்களை சிறைபிடித்தனர். இந்தத் தகவலறிந்து வந்த ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையிலான போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். படப்பிடிப்பு நடத்திய குழுவினரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.ஏற்கனவே பல்லுயிர் தளத்தை குறிப்பிட்டு டங்ஸ்டன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என சுற்றுப்பகுதி கிராம மக்கள் போராடி வருகின்றனர். இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், படப்பிடிப்புக்காக வெடி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடித்த நடிகர் வருங்கால முதலமைச்சரா?