உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீயணைப்பு விழிப்புணர்வு

தீயணைப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை விவசாய கல்லுாரி, மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் அரும்பனுார் புதுாரில் தீ விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நடந்தது. தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் பேசுகையில், ‘‘மின்கசிவு, சமையல் எரிவாயு கசிவு, கவனக்குறைவாக தீப்பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவையே தீவிபத்து ஏற்பட காரணங்கள். வீடுகள், கல்வி நிறுவனங்கள், பொது இடங்களில் தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் பதற்றமின்றி செயல்படுவதோடு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சாரம், எரிவாயு இணைப்புகளை பாதுகாப்பாக துண்டிக்க வேண்டும். புகை சூழ்ந்த இடங்களில் கவனமாக வெளியேற வேண்டும்’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை