உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குப்பைக் கிடங்கில் தொடரும் தீ

 குப்பைக் கிடங்கில் தொடரும் தீ

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள நகராட்சி திடக்கழிவு மேலாண்மை குப்பைக்கிடங்கில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீயினால் அந்தப்பகுதி தென்னை மரங்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் அந்தப்பகுதியினர் குப்பைக்கிடங்கு செல்லும் வழியை பூட்டினர். குப்பை ஏற்றி வந்த வாகனங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். சப்கலெக்டர் உட்கர்ஷ்குமார், போலீசார் சமாதானப்படுத்தினர். குப்பைக் கிடங்கு பகுதியை வேலியிட்டு பாதுகாக்கவும், கேமரா பொருத்தி கண்காணிக்கவும் நகராட்சி கமிஷனர் இளவரசனுக்கு உத்தரவு பிறப்பித்தார். சில நாட்களில் குப்பையில் ஏற்பட்ட தீ முழுவதுமாக எரிந்து தானாக அணைந்தது. இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் குப்பைக் குவியல்களில் தீ பரவி எரிகிறது. பேரையூர் ரோடு பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது. குப்பையில் நகராட்சி பணியாளர்களே தீ வைத்து விடுவதாக அந்தப்பகுதினர் புகார் தெரிவிக்கின்றனர். விரைவில் வேலி, கேமரா பொருத்தி தீவைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ