உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வைக்கோலில் தீ லாரி தப்பியது

 வைக்கோலில் தீ லாரி தப்பியது

வாடிப்பட்டி: காரியாபட்டியில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு மினி லாரி நேற்று வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டிக்கு வந்தது. வாடிப்பட்டியில் எம்.எல்.ஏ., அலுவலகத்தை மாலை 5:30க்கு கடந்து சென்றபோது உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதனால் வைக்கோலில் தீப்பிடித்து புகைய துவங்கியது. டிரைவர் லாரியை தாதம்பட்டி பிரிவு சாலையோர காலி இடத்தில் நிறுத்தினார். தீ பரவ துவங்கி புகை மூட்டமாக மாறியது. வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) ஆல்பர்ட் பிரான்சிஸ் தலைமையில் வீரர்கள், அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் ஒன்றரை மணி நேரம் போராடி வைகோல் உருளைகளை அகற்றி தீயை அணைத்தனர். லாரி தப்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ