உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வனவிலங்குகள் வேட்டை துப்பாக்கியுடன் ஐவர் கைது

வனவிலங்குகள் வேட்டை துப்பாக்கியுடன் ஐவர் கைது

அலங்காநல்லுார்: பாலமேடு அருகே வன விலங்குகளை வேட்டையாடிய ஐந்து பேரை நாட்டு துப்பாக்கியுடன் வனப்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மதுரை வனப்பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் சீனிவாசன் உத்தரவின்படி வனச்சரக அலுவலர் குமரேசன், வனவர் பூபதிராஜன் தலைமையில் காப்பாளர்கள் ராஜ்குமார், சேதுராஜ், துரைராஜ் அடங்கிய குழுவினர் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு பாலமேடு- வெள்ளையம்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர். பொம்மிநாயக்கன்பட்டி அருகே மறைவாக நின்ற சரக்கு வேனை சோதனையிட்டனர். அதிலிருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரு முயல்கள், பேட்டரி லைட்டுகள், ஐந்து வேட்டை நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேட்டையாடிய சேந்தமங்கலம் சித்திரக்கண்ணன் 28, ராஜ்குமார் 23, விஜயகுமார் 24, மேட்டுப்பட்டி முத்துக்கிருஷ்ணன் 23, பொம்மிநாயக்கன்பட்டி லட்சுமணன் 26, ஆகியோரை கைது செய்து அழகர் கோவில் வனச்சரக அலுவலகத்தில் மேல் நடவடிக்கைக்கு ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ