சாஸ்தா கோயில் விழா கொடியேற்றம்
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் தர்ம சாஸ்தா கோயிலில் உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. முக்கிய நிகழ்வாக டிச.16ல் திருப்பள்ளி எழுச்சி, சிறப்பு அபிஷேகங்கள், மங்கள இசை, பக்தி பாடல் நிகழ்ச்சி, டிச.17ல் 1008 திருவிளக்கு பூஜையும், டிச.18ல் உலக நன்மைக்காக கணபதி, நவக்கிரக ஹோமம், துர்கா, லட்சுமி, கோ, கஜ பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகளை தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.இரவு 7:00 மணிக்கு ஐயப்பன், முருக பக்தர்களுடன், மதுரை பாலாஜி ராமானுஜ சுவாமி குழுவினர் பஜனையுடன் மின்னொளி அலங்காரத்தில் சுவாமி நகர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீனிவாசன், பக்தி பணி, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.