வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை குறைவு
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகாவில் கப்பலுார், சின்ன உலகாணி, ஆலங்குளம் பகுதிகளில் விவசாயிகள் மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூஞ்செடிகளை சாகுபடி செய்துள்ளனர். பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளது. ஆடி மாத தொடக்கம் என்பதால் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சி போன்ற எந்த விசேஷங்களும் இல்லாததால் மல்லிகைப்பூ விலை மிகவும் குறைந்துள்ளது.சாதாரண நாட்களில் கிலோ ரூ.600 முதல் 700 வரையும், விசேஷ நாட்களில் ரூ.2 ஆயிரம் வரையும் விற்றது. தற்போது ரூ.200க்கு சென்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பும் சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பூக்களை பறிக்கும் கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்து உள்ளனர்.