உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளே உங்களுக்குத்தான்

விவசாயிகளே உங்களுக்குத்தான்

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் சுபா சாந்தி கூறியிருப்பதாவது: மணப்பச்சேரி, வி. புதுார் கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்ட முகாம் இன்று (மே 29) துவங்கப்படுகிறது. இதில் வேளாண், தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள் பயிர் காப்பீடுகள், பிரதமரின் நிதி உதவி பெறும் திட்டம், இடுபொருள்களை வழங்க உள்ளனர். விவசாயிகள் தங்கள் தேவையை மனுவாக கொடுத்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ