மேலும் செய்திகள்
சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
18-Oct-2024
மதுரை, : தமிழ்நாடு வனத்துறை அலுவலகப் பணியாளர் சங்கம் சார்பில் மதுரை வன மண்டலத்திற்கான பொதுக்குழுக்கூட்டம் மதுரை மாவட்ட வன அலுவலகத்தில் நடந்தது. மாநில செயலாளர் ஆறுமுகவிக்னேஷ் வரவேற்றார்.மாநில பொருளாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார். மதுரை, தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர் வனத்துறை அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மதுரை வன மண்டலத்திற்கான தலைவராக பிரதீப், செயலாளராக கிஷன், பொருளாளராக கிருஷ்ணகுமார் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நீதிராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ், நிர்வாகிகள் முத்துவேல், சிவகுரும்பன் பேசினர். மண்டலத் துணைத்தலைவர் அன்னலட்சுமி நன்றி கூறினார்.
18-Oct-2024