உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க.,வுக்கு வீதியில் இறங்கும் பரிதாப நிலை; முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம்

தி.மு.க.,வுக்கு வீதியில் இறங்கும் பரிதாப நிலை; முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம்

அலங்காநல்லுார் : ''தி.மு.க., நான்கரை ஆண்டுகளாக நன்றாக ஆட்சி செய்யாததால்தான் வீடு வீடாகச் சென்று ஆட்களைச் சேர்க்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது'' என சட்டசபை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமார் விமர்சன்ம செய்தார்,அலங்காநல்லுார் அருகே கோட்டைமேடில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: மக்களைக் காப்போம்: தமிழகத்தை மீட்போம்' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். எளியோர் உயிரை துச்சமாக நினைக்கும் போக்கு இன்றைய ஆட்சியாளர் மனதில் நிறைந்து விட்டது. தமிழகம் சட்ட ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் பெருக்கத்தால் அல்லாடுகிறது. அரசின் அச்சாணியாக இருக்கும் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை. சிறுமிகள் முதல் முதியோர் வரை எவரும் பாதுகாப்போடு நடமாட முடியவில்லை. ஆனால் எதுவும் நடக்காதது போல ஸ்டாலின் நினைக்கிறார். வரம்பு மீறிய விளம்பர வெளிச்சத்தில் ஆட்சி நடத்துகிறார். நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அதனால் இன்று வீதியில் இறங்கும் பரிதாப நிலைக்கு தி.மு.க., தள்ளப்பட்டுள்ளது என்றார்.ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராஜேஷ் கண்ணா, தர்மர், மனோகரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி