மேலும் செய்திகள்
தினமலர் செய்தி கிடைத்தது தீர்வு
10-Mar-2026
மேலுார்: நா.கோவில்பட்டியில் ரூ. 28 லட்சத்தில் மேல்நிலைதொட்டி மற்றும் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகிறது. ஆனால் பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாசன நீரை குடிநீராக பயன்படுத்தினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது இதையடுத்து பி.டி.ஓ., செல்ல பாண்டியன், ஊராட்சி செயலர் இளையராஜா ஏற்பாட்டில் மேல்நிலை தொட்டி, ஆழ்குழாய் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.
10-Mar-2026