உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிறுவனர் தின விழா

நிறுவனர் தின விழா

பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் நிறுவனர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கல்லுாரி நிறுவனர் நாராயணன் செட்டியார் படத்திற்கு செயலாளர் நாராயணன், முதல்வர் சந்திரன், பேராசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை சின்மயா மிஷன் ஜிதேஷ் சைதன்யா பேசினார். மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.கல்லுாரி நிறுவனர் நாராயணன் செட்டியார் டிரஸ்ட் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. பேராசிரியர் சங்கரநாராயணன் தொகுத்துரைத்தார். துணை முதல்வர் கணேசன் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ