மேலும் செய்திகள்
தலைக்குளம் கிராமத்தில் மருத்துவ முகாம்
21-Jan-2025
வாடிப்பட்டி, : வாடிப்பட்டி நகர அரிமா சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. சங்கத் தலைவர் பாபு சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் சிவகுமார், பாலசுந்தரம், பாலாஜி முன்னிலை வகித்தனர். செயலாளர் சிவசங்கர் வரவேற்றார். மண்டல தலைவர் சையது ஜாபர், வட்டாரத் தலைவர் பரிசித்துராஜன் துவக்கி வைத்தனர். புனிதம் மருத்துவமனை டாக்டர்கள் வீசர் விக்னேஷ், சுமேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் புரோஸ்டேட் சுரப்பி மற்றும் சிறுநீரககல் கண்டறியும் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினர். சங்க நிர்வாகிகள் பாபநாசம், இளங்கோ, குருசாமி, குணசேகரன், டாக்டர்கள் பொன் யாழினி, துர்கா உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் ராஜ பிரபு நன்றி கூறினார்.
21-Jan-2025