உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டிஜிட்டல் மார்க்கெட்டிங் இலவச பயிற்சி

டிஜிட்டல் மார்க்கெட்டிங் இலவச பயிற்சி

மதுரை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மேம்பாட்டு மையம் (எம்.எஸ்.எம்.இ., – டி.எப்.ஓ.,), கல்பதரு அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த 5 நாட்கள் இலவச பயிற்சி, செப். 21 முதல் 25 வரை மதுரை சொக்கிகுளம் கல்பதரு அறக்கட்டளை தீக்‌ஷா ஹாலில் நடக்கிறது. பெண் தொழில்முனைவோர், சுற்றுச்சூழல், இயற்கை சார்ந்த பொருட்கள், கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்போர் பங்கேற்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பத்தாவது தேர்ச்சி பெற்றோர் பங்கேற்கலாம். உள்ளூர், வெளிநாட்டு சந்தைகளில் டிஜிட்டல் மூலம் தொழிலை வளர்ப்பது, அடிப்படை, நடைமுறை பயிற்சி, மார்க்கெட்டிங் குறித்து பயிற்சி அளிக்கப்படும். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். முதலில் வரும் 30 பேருக்கு மட்டும் அனுமதி. முன்பதிவு: 81246 04716.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை