மேலும் செய்திகள்
அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி
21-Sep-2024
மதுரை: மதுரை நரிமேடு பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.மதுரை நரிமேடு, கட்டபொம்மன் நகர், செல்லுார் செல்லும் 50 அடி ரோடு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. பிரதான தெரு என்பதால் வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. நேற்று மதியம் நான்கைந்து முறை மின்தடை ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் மீண்டும் மின்சாரம் வருவதற்கு, 20 நிமிடங்களுக்கு மேல் ஆனதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். சிலர் 'மின்னகத்திற்கு' புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவித்தனர்.
21-Sep-2024