மேலும் செய்திகள்
இலக்கிய வட்டத்தில் நுால்கள் வெளியீடு
21-Feb-2026
ஆசிரியர் : அகிலா கிருஷ்ணமூர்த்தி வெளியீடு : தையல், 14/48, வெங்கடசாமி தெரு, சேலையூர், சென்னை - 600 073 அலைபேசி : 95510 65500 பக்கம் : 196 விலை : ரூ.250 மெ ன்பொறியாளராக பணிபுரியும் அகிலா கிருஷ்ணமூர்த்தியின் கற்பனையில் உதித்த கவிதைகளை கொண்டு வெளிவந்துள்ளது அக்கணமுதல். பழைய மூங்கிலையே பார்த்துக் கொண்டிருந்த கண்களுக்குப் புதிய புல்லாங்குல் கிடைத்த மாதிரி பல நாட்களுக்குப் பிறகு என்னை பரவசப்படுத்திய கவிதைத்தொகுப்பு இது என கவிஞர் நெல்லை ஜெயந்தாவும், அகிலாவின் கவிதைகள் வாசித்தேன். வரிகள் ஒவ்வொன்றும் அற்புதம் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது நுாலின் சிறப்பை எடுத்து கூறுவதாக அமைந்துள்ளன. விடியல், முழுமதி, ஒழுக்கம், ஆதவன் ஆத்திசூடி, காதல் மொழி, காதல் மழை என பல்வேறு தலைப்புகளில் ஒவ்வொரு கவிதையையும் தந்திருப்பது அடுத்த கவிதை என்னவாகஇருக்கும் என படிக்கும் ஆவலை துாண்டுகிறது. - மேஷ்பா
21-Feb-2026