உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

மதுரை : மதுரையில் மாவட்ட கல்வித்துறை ஓய்வுப்பெற்ற அமைச்சுப் பணியாளர் நலச்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.தலைவர் ஜெயமூர்த்தி தலைமை வகித்தார். மகளிரணி தலைவி வாசுகி வரவேற்றார். செயலாளர் விஜயராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் குமரன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மறைந்த நிர்வாகி பார்த்தசாரதி படத்தை, மாநில தலைவர் பா.செல்வம் திறந்து வைத்தார். இதில் 70 வயதை தாண்டிய ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவப் படி ரூ.1000 வழங்க வேண்டும். இலவச பஸ் பாஸ் வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலாளர் ஜனார்த்தனம், நிர்வாகிகள் ராமானுஜம், ஜெயராமன், சுப்பையா, பாலகிருஷ்ணன், பத்மநாபன், சரவணன், பைரவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி