மேலும் செய்திகள்
மதுரை டாக்டருக்கு மருத்துவ சேவை விருது
09-Oct-2025
மதுரை: மதுரை மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு அறக்கட்டளை, ரோட்டரி கிளப் ஆப் மதுரை ஜல்லிக்கட்டு, தொண்டு அமைப்புகள் மற்றும் தொண்டு உள்ளங்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. நிறுவன தலைவர் பூபதி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு அறக்கட்டளை நிர்வாகி மணிகண்டன் வரவேற்றார். மாவட்ட நீதிபதி கே.கே.ரஜினி துவக்கி வைத்தார். இந்திய வழக்கறிஞர் சங்க மாநில தலைவர் சாமிதுரை, திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், ரோட்டரி உதவி ஆளுனர் நெல்லை பாலு, டாக்டர் சுகன்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Oct-2025