உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோ கோ போட்டி: எம்.கே.வி. சாலா ஒ.சி.பி.எம்., பள்ளிகள் சாம்பியன்

கோ கோ போட்டி: எம்.கே.வி. சாலா ஒ.சி.பி.எம்., பள்ளிகள் சாம்பியன்

திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் நடந்த மாவட்ட கோ கோ போட்டிகளில் மாணவர் பிரிவில் எம்.கே.வி. சாலா மேல்நிலைப்பள்ளி, மாணவியர் பிரிவில் ஒ.சி.பி.எம்., பள்ளி அணிகள் சாம்பியனாக தேர்வாகின.கோகுல்தாஸ் நினைவு கோப்பைக்காக 'நாக் அவுட்' முறையில் நடந்த போட்டிகளில் மாணவர், மாணவியர் பிரிவுகளில் தலா 11 பள்ளிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் பேரையூர் எஸ். மேலப்பட்டி எம்.கே.வி. சாலா மேல்நிலைப் பணி அணி 2-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியை வென்றது.மாணவியர் பிரிவில் ஒ.சி.பி.எம். பள்ளி 12-5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அத்திப்பட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளியை வென்றது. வென்ற இரு பள்ளிகளும் சாம்பியனாக தேர்வாகின.சிறந்த வீரராக வி.எச்.என். மேல்நிலைப்பள்ளி சஞ்சய் குமார், சிறந்த வீராங்கனையாக ஒ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரிஷிகா, சிறந்த விரட்டு வீரராக என்.கே.வி. சாலா மேல்நிலைப்பள்ளி கிஷோர், வீராங்கனையாக இளமனுார் அரசு மேல்நிலைப்பள்ளி அர்ச்சனா, சிறந்த ஓடும் வீரராக திருப்புவனம் அரசு பள்ளி யூசுப், வீராங்கனையாக அத்திப்பட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளி வனிதா தேர்வு செய்யப்பட்டனர். பரிசளிப்பு விழாவில் கல்லுாரி செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் முரளிதாஸ் முன்னிலை வகித்தார். முதல்வர் பொன்னி வரவேற்றார். சவுராஷ்டிரா பிராமண வித்யா சபா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சங்கர் பாபு பரிசு வழங்கினர். நிர்வாக குழு உறுப்பினர் பன்சிதர், முன்னாள் உடற்கல்வி இயக்குனர் ரவீந்திரன், சவுராஷ்டிரா கல்லுாரி முதல்வர் சீனிவாசன், உடற்கல்வி பயிற்சியாளர்கள் சிவப்பிரசாத், குபேந்திரன், மகளிர் கல்லுாரி துறை தலைவர்கள் உமாமகேஸ்வரி, விஜயலட்சுமி, மஞ்சுளா, ரோகிணி, ரேணுகா, மேகலா, பேராசிரியர்கள் கிருஷ்ண ஸ்ரீ, சந்தியா, சுகன்யா, ஷெர்லி, நூலக உதவியாளர் மாரியம்மாள் பங்கேற்றனர். கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரன் போட்டிகளை ஒருங்கிணைத்தார். உடற் கல்வி பேராசிரியர் அமுதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ