வாவிடமருதுார் வராத அரசு பஸ்
அலங்காநல்லுார்: மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டில் இருந்து வாவிடமருதுார், அலங்காநல்லுார் வழியாக பாலமேடு செல்லும் அரசு பஸ்கள் 4 மாதங்களாக இயக்கப்படாததால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். இந்த பஸ் ஊமச்சிகுளம், சத்திரப்பட்டி, வாவிடமருதுார் வழியாக அலங்காநல்லுார், பாலமேடு வரை 6 முறை வந்து சென்றன. 4 மாதங்களாக இந்த தடத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை. வாவிடமருதுார் குமார் கூறியதாவது: பஸ்கள் வராததால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை செல்வோர் என தினமும் 100க்கும் மேற்பட்டோர பாதிக்கப்படுகின்றனர். மதுரை கடைகளில் வேலை முடித்து இரவு வர பஸ் வசதியின்றி தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். காலை, மாலை தலா 2 முறை மதுரை - பாலமேடு, மதியம் அலங்காநல்லுார் வரையும் மீண்டும் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.