உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாங்காய் விவசாயிகளை கண்டு கொள்ளாத அரசு

மாங்காய் விவசாயிகளை கண்டு கொள்ளாத அரசு

மேலுார்: மேலுார் சேக்கிபட்டி, கேசம்பட்டி, மேலவளவு பகுதிகளில் 'கிளி மூக்கு' எனப்படும் கல்லாமை வகை மாங்காய் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. இந்த ரக மாங்காய் தோப்பை பராமரிக்க ஆண்டுக்கு விவசாயிகள் ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்கின்றனர்.ஆனால் ஒரு மாதமாக விவசாயிகளிடம் ஒரு கிலோ மாங்காயை ரூ. 5க்கு வாங்கும் வியாபாரிகள், அதனை கூடுதல் விலைக்கு விற்கின்றனர். குறைந்த விலைக்கு விற்பதால் மாங்காயை விவசாயிகள் பறிக்கவில்லை. அவை மரங்களில் பழுத்து வீணாகிறது. ஒரு கிலோ மாங்காய் ரூ. 20க்கு விற்றால்தான் விவசாயிகளின் 'கையை கடிக்காது'.இவ்வகை மாம்பழத்தை உணவாக, பழச்சாறாக தயாரிக்கலாம் என்பதால், மாங்காயை கொள்முதல் செய்யவும், உரிய விலையை நிர்ணயம் செய்யவும் விவசாயிகளின் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ