பட்டமளிப்பு விழா
மேலுார்: கிடாரிப்பட்டி லதா மாதவன் கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் முருகன் வரவேற்றார். சேர்மன் மாதவன் தலைமை வகித்தார். அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளங்கோவன் 125 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். முதல்வர்கள் சுடலைமணி, தவமணி, செயல் அலுவலர்கள் முத்துமணி, பிரபாகரன், காந்திநாதன், மீனாட்சிசுந்தரம், பழனிச்செல்வம், துணை முதல்வர் ரமேஷ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.