உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

வாடிப்பட்டி: வாடிப்பட்டி மதுரை ஸ்கூல் ஆப்மேனேஜ்மென்ட் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. எம்.எஸ்.எம்., குழும துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். தலைவர் ராஜாமணியம்மாள் தலைமை வகித்தார். ஆலோசகர் இந்திய அறிவியல் கழக பேராசிரியர் மதிராஜன் முன்னிலை வகித்தார். முதன்மை விருந்தினர் கவுரவ நீதிபதி கருணாநிதி பங்கேற்று, ‘‘உலகளாவிய சந்தையில் தழுவல்திறன், கார்ப்பரேட் தர்மம், தொலைநோக்கு தலைமைத்துவத்தின் அவசியம்’ குறித்து பேசினார். சிறப்பு விருந்தினர் அண்ணா பல்கலை மண்டல அலுவலக டீன் லிங்கதுரை தொடர்கற்றல், செயல்பாட்டு சிறப்பு, பொறுப்புள்ள முடிவெடுத்தல் குறித்து பேசினார். மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எம்.எஸ்.எம்.,சர்வவித்யா கல்வி மற்றும் பொது அறக்கட்டளை சார்பில் சிறந்த 3 மாணவர்களுக்கு ரூ.10ஆயிரம், புத்தகங்கள் பரிசு வழங்கப்பட்டன. பேராசிரியர் செல்வேந்திரன் தொகுத்து வழங்கினார். பொருளாளர் அகிலன் நன்றி கூறினார். செயலாளர் ஜெயராம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ