மேலும் செய்திகள்
ஞாயிறு அட்டவணையில் மெட்ரோ ரயில் இயக்கம்
14-Jan-2025
மதுரை: மதுரை கே.புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் ஜி.எஸ்.டி. பிராக்டிஷனர், வருமான வரி கணக்காளர் குறித்து கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜன. 25, 26 காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடத்தப்படும் ஜி.எஸ்.டி பிராக்டிஷனர் பயிற்சியில் ஜி.எஸ்.டி. பதிவு முறை, ரிட்டர்ன் வகைகள், பைலிங் செய்தல், ரீபண்ட், இன்புட் வரி கிரெடிட் குறித்து விளக்கப்படும். ஜன. 27, 28 காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் வருமான வரி கணக்காளர் பயிற்சியில் வருமானங்கள், அவற்றின் வரி வகைகள், வருமான வரி பிடித்தம், கேபிடல் கெயின்ஸ், அட்வான்ஸ் வரி கணக்கு, ரிட்டர்ன் பைல் செய்தல், ரீபண்ட் போன்றவை கற்பிக்கப்படும். மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் உண்டு. இருபாலரும் பங்கேற்கலாம். அலைபேசி : 86956 46417.
14-Jan-2025