உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூலிப்படையைச் சேர்ந்த 6 பேருக்கு குண்டாஸ்

கூலிப்படையைச் சேர்ந்த 6 பேருக்கு குண்டாஸ்

மதுரை: மதுரை பார்க் டவுனைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 52. பார்சல் சர்வீஸ் நிறுவனத்தை கல்லாணை என்பவருடன் இணைந்து நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த மாதம் கூலிப்படையை ஏவி ராஜ்குமாரை கல்லாணை கொலை செய்தார். இதுதொடர்பாக கல்லாணை, அவரது மகன் பொன்சரவணன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையாக செயல்பட்ட ஆனையூர் அகதிகள் முகாம் ராம்கி 28, சிவலிங்கம் 43, பிபீகுளம் ரவிமாறன் 55, ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைதான நிலையில், கூட்டாளிகளான மகபூப்பாளையம் ஜெயராஜ் 41, மாடக்குளம் முரளி 50, சிக்கந்தர் சாவடி லாரன்ஸ் 51, ஆகியோரும் இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை