மேலும் செய்திகள்
புவனகிரியில் பா.ஜ., கையெழுத்து இயக்கம்
08-Mar-2025
திருப்பரங்குன்றம் : மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., வினர், துண்டு பிரசுரம் வினியோகித்து, கையெழுத்து இயக்கம் நடத்தினர்.மும்மொழி கல்விக் கொள்கையின் முக்கியத்துவம், நன்மைகள், மும்மொழி கல்விக் கொள்கையை தி.மு.க., எதிர்க்கும் காரணங்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை திருநகர் மகாலட்சுமி காலனியில் வினியோகித்தனர். மும்மொழி கல்வி திட்டத்திற்கு ஆதரவாக மக்களிடம் ஆதரவு கேட்கும் கையெழுத்து இயக்கத்தை நேற்று நடத்தினர்.பா.ஜ., நிர்வாகிகள் வேல்முருகன், வெற்றிவேல் முருகன், கபிலன், ராஜசேகர், ஆனந்தன், மணிகண்டன், கார்த்தி பொதுமக்கள், மாணவர்களிடம் கையெழுத்துக்கள் பெற்றனர்.
08-Mar-2025