உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 500 போலீசாருக்கு ஹெல்மெட்

500 போலீசாருக்கு ஹெல்மெட்

மதுரை : மதுரை நகர் போலீசார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 500 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. எலிக்ஸிர் பவுண்டேஷன், டூ ஹோம் பைனான்ஸ் சார்பில் 3000 போலீசார் உட்பட மொத்தம் 12 ஆயிரம் பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக நேற்று 500 ஹெல்மெட் வழங்கி கமிஷனர் லோகநாதன் பேசுகையில், ''மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நாமும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும்'' என்றார்.போக்குவரத்து துணைகமிஷனர் வனிதா, கூடுதல் துணைகமிஷனர் திருமலைகுமார், உதவி கமிஷனர்கள் இளமாறன், செல்வின், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், நந்தகுமார், சோபனா, பஞ்சவர்ணம், பூர்ணகிருஷ்ணன், சுரேஷ், தங்கப்பாண்டி, பைனான்ஸ் நிறுவன அதிகாரி ராகவன், பவுண்டேஷன் சார்பில் கார்த்திக், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Krishnamurthy Venkatesan
ஏப் 26, 2025 12:58

அப்படியென்றால் இதுவரை இவர்கள் ஹெல்மெட் வாங்கவே இல்லையா? 70000, 80000 க்கு வண்டி விற்போர் ஹெல்மெட்டையும் சேர்த்தே விற்றால் என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை