உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு அரசியலமைப்பு பாடம் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ரமேஷ் விருப்பம்

மாணவர்களுக்கு அரசியலமைப்பு பாடம் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ரமேஷ் விருப்பம்

மதுரை: ''மாணவர்களுக்கு அரசியலமைப்பு பாடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்வித்துறை கவனம் செலுத்த வேண்டும்'' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி எம்.எஸ். ரமேஷ் பேசினார். மதுரை பாத்திமா கல்லுாரியில் செயின்ட் ஜோசப் ஆப் லியோன், செயின்ட் ஜோசப் மகாணம், லீட் அமைப்பின் சார்பில் அரசியலமைப்பு தின விழா நடந்தது.இதில் நீதிபதி பேசியதாவது: நம் அரசியல் சாசனத்தில் முக்கிய அம்சங்களாக குடிமக்களின் கடமைகள், அடிப்படை உரிமைகள், ஓட்டளிக்கும் உரிமை குறிப்பிட்டுள்ளதோடு பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் விலக்கி அமைக்கப்பட்டது. நம் நாட்டில் பல மதங்கள், கலாசாரங்கள் உள்ளன. அதற்கேற்ப சுதந்திரமாக முடிவுகள் எடுக்கலாம்.மத வேறுபாடின்றி மாநிலங்களாக நாம் பிரிந்து இருந்தாலும் மத்தியில் நாம் வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருப்பது முதன்மையானது. அரசியல் சாசனம் நம்மை வழி நடத்துகிறது. மாணவர்களுக்கு அரசியலமைப்பு பாடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்வித்துறை இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.கல்லுாரி முதல்வர் செலின் சகாயமேரி, துணை முதல்வர்கள் பாத்திமா மேரி, அருள்மேரி, டயானா கிறிஸ்டி, மீனாட்சி, லீட் அமைப்பின் இயக்குனர் அமலா ஆச்சரியம் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ