உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதி இல்லை உயர்நீதிமன்றத்தில் தகவல்

பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதி இல்லை உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை: பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதியில்லை என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனு: சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் சிலையை மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே முக்கோண வடிவ பூங்கா பகுதியில் அமைக்க அனுமதிக்க தமிழக வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, உள்துறை செயலர்கள், கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான்: நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் சிலைகளை நிறுவ அனுமதிப்பதில்லை என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. நிலையான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. தனியார் பட்டா நிலத்தில் சிலைகளை நிறுவலாம். வள்ளியூர் மார்க்கெட் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை நிறுவ பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளது.மனுதாரரின் கோரிக்கையை அரசு 2019 ல் நிராகரித்தது. அதற்கு எதிராக தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது புதிதாக மனு செய்தது ஏற்புடையதல்ல. மனுதாரர்: மதுரை சிம்மக்கல்லில் நடு ரோட்டில் முன்னாள் முதல்வரின் சிலை உள்ளது. இதுபோல் பல இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மனு மூலம் மனுதாரர் நிவாரணம் தேடலாம். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை