உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊர் பெயர் மாறியதால் சிக்கல் பயிர் சேதத்திற்கு இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊர் பெயர் மாறியதால் சிக்கல் பயிர் சேதத்திற்கு இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் சேதத்திற்கு இன்சூரன்ஸ் தொகையை விடுவிக்க விவசாயி தாக்கல் செய்த வழக்கில், 'கிராமத்தின் பெயரை தவறாக பதிவேற்றம் செய்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு 'கார்பஸ்' நிதியிலிருந்து தொகையை வழங்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டம் சண்முகம் தாக்கல் செய்த மனு:எனது விவசாய நிலத்தில் 2018-19 ல் பயிருக்கு சேதம் ஏற்பட்டது. பயிருக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தேன். பயிர் சேதம் ஏற்பட்ட பகுதியை 'வெள்ளமறிச்சுகட்டி' என பதிவு செய்வதற்கு பதிலாக, 'களரி' என தவறாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம பெயரிலுள்ள முரண்பாடு காரணமாக இன்சூரன்ஸ் தொகையை எனக்கு வழங்கவில்லை. தொகையை வழங்கக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலித்து தொகையை விடுவிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி வி.லட்சுமிநாராயணன்:வருவாய் கிராமத்தின் பெயரை தவறாக பதிவு செய்திருந்தால் நிவாரணம் பெறும் வகையில் தமிழக கூட்டுறவுத்துறை(2021) அரசாணைப்படி ஒரு நிதி திட்டம் (கார்பஸ் நிதி) உருவாக்கப்பட்டது. விபரங்களை பதிவேற்றும்போது ஏதேனும் தவறு ஏற்பட்டால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், விவசாயிகளுக்கு 'கார்பஸ்' நிதியிலிருந்து தொகை வழங்கப்படும். இதை நிறைவேற்றுவதற்கு உரிய அதிகாரி கலெக்டர். மனுதாரருக்கு ஏற்பட்ட பயிர் சேத விபரங்களை சரிபார்த்து, அரசாணைப்படி நடவடிக்கை மேற்கொண்டு தொகை வழங்கப்படுவதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை