உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் நிலம் மீட்பு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலம் மீட்பு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இதற்கு சொந்தமான நிலத்தை அறநிலையத்துறை முறையாக பராமரிக்கவில்லை. ஆக்கிரமிப்புகள் உள்ளன. சொத்துக்களை பாதுகாக்க, ஆவணங்கள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ். ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில் சொத்துக்களை மீட்டு கோயில் நலனிற்கு பயன்படுத்த வேண்டும். இதை அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி மனுதாரரின் மனுவை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !