உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். செயலாளர் மனோகரன், மாநில பொருளாளர் தமிழ், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா, மாவட்ட நிர்வாகிகள் சந்திரபோஸ், பரமசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிர்வாகிகள் கூறுகையில், ''உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ரோட்டோர கொடிக்கம்பங்கள் அகற்றப்படுகின்றன. ஆனால் திருச்சியில் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் இருந்த எங்கள் சங்கம், அரசு ஊழியர் சங்கம், அகில இந்திய சம்மேளனம் அமைப்புகளின் கொடிகளை முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் அகற்றினர். தடுத்த நிர்வாகிகளை கைது செய்துள்ளனர். அதை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ