மேலும் செய்திகள்
பால்குடம் எடுத்த பக்தர்கள்
10-Apr-2025
மதுரை:' மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தொடர்பாக மாநகராட்சி சார்பில் வெளியான மின்கட்டணம் பாக்கி அறிவிப்புக்கு ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க துணைத் தலைவர் சுந்தரவடிவேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: மீனாட்சி அம்மன் கோயிலில் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ஊழியர்கள் கையாடல் செய்யும் நிகழ்வுக்கும் சிலருக்கு அபராதம் மட்டுமே விதித்து பிரச்னையை கைவிடுகிறது. பக்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே நடக்கும் கைகலப்பும் தொடர்கிறது.தற்போது மீனாட்சி அம்மன் கோயில் மின்கட்டணம் பாக்கி ரூ. ஒரு கோடி செலுத்த வேண்டும் என்ற செய்தி பக்தர்களை வெகுவாக பாதித்துள்ளது. இதனை பக்தர்களுக்கு ஏற்பட்ட அவமானமாக பார்க்கிறோம். முக்கிய ஆன்மிகத் தலத்திற்கு ஏற்பட்ட களங்கத்திற்கு கோயில் நிர்வாகமும், மாநகராட்சியும் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
10-Apr-2025