உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தக்காளி, முருங்கைக்காய் விலை உயர்வு

தக்காளி, முருங்கைக்காய் விலை உயர்வு

மதுரை, : மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி, முருங்கைக்காய் விலை திடீரென அதிகரித்துள்ளது.கடந்த வாரம் வரை 15 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பத்தின் விலை ரூ.150 முதல் ரூ.200 ஆக இருந்தது. நேற்று கிலோ ரூ.500 ஆக அதிகரித்துஉள்ளது என்கிறார் மதுரை மாட்டுத்தாவணி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் சின்னமாயன். அவர் கூறியதாவது: ஆந்திரா, தெலுங்கானாவில் அனந்தபூர், கல்யாண் துர்கா, சித்ர துர்கா பகுதியில் கடும்மழை பெய்தது.இதனால் அங்கிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தக்காளி வரத்து நின்று விட்டது. மேலும் கர்நாடக, ஆந்திர வியாபாரிகள் தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை மார்க்கெட்டுகளில் இருந்து தக்காளி வாங்கிச் செல்கின்றனர். வெளியூர் வரத்து குறைவு, உள்ளூர் மார்க்கெட்டில் இருந்து வெளிமாநிலம் சென்றதால் கிலோ ரூ.40 ஆக உள்ளது. இது சில்லரை கடைகளுக்கு செல்லும்போது இன்னும்அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதே காரணத்தால் கிலோ ரூ.15க்கு விற்ற முருங்கைக்காய் தற்போது ரூ.70 ஆக அதிகரித்துஉள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ