மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு பயிற்சி
11-Sep-2024
சணல் பொருட்கள் கண்காட்சி துவக்கம்
13-Sep-2024
மதுரை : அரசு கைவினைப்பொருட்கள் சேவை மையம், பெட்கிராட் நிறுவனம் சார்பில் மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் சணல் பை தயாரிப்பு பயிற்சி துவக்க விழா மதுரையில் நடந்தது.பெட்கிராட் பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சாராள் ரூபி முன்னிலை வகித்தனர். சேவை மைய உதவி இயக்குநர் ரூப் சந்தர் பேசுகையில், ‛‛சணல் பை பயிற்சி பெற்றவர்கள் சுயதொழில் துவங்கி தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் அபிவிருத்தி செய்யலாம்'' என்றார். அலுவலர் பிரதிக் ஷா உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வழிமுறையை' விளக்கினார். மானியத்துடன் வங்கிக்கடன் பெறுவது குறித்து கதர் கிராம ஆணைய உதவி இயக்குநர் கலிபர் ரஹ்மான், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் ஜெயா பேசினர். மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முதல்வர் கண்ணன், பூம்புகார் மேலாளர் சோலைராஜ், பயிற்சியாளர் சரஸ்வதி பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.
11-Sep-2024
13-Sep-2024