உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நெல் கொள்முதல் உச்சவரம்பு அதிகரிக்க வலியுறுத்தல்

 நெல் கொள்முதல் உச்சவரம்பு அதிகரிக்க வலியுறுத்தல்

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் நடந்தது. துணைத் தாசில்தார் வீரக்குமார் முன்னிலை வகித்தார். விவசாயி கண்ணன் : திரளி கிராமத்தில் புதிதாக கட்டி முடித்துள்ள ரேஷன் கடையை திறக்காமல் உள்ளனர். அந்த பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர் என்றார். வட்ட வழங்கல் துறை அலுவலர் அய்யம்மாள் : அந்த ரேஷன் கடை நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளதால் சுவர்களில் ஈரக் கசிவு ஏற்படுகிறது. இதனால் பொருட்களை வைக்க இயலவில்லை. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விவசாயி பழனிச்சாமி: நெல் கொள்முதல் உச்சவரம்பை 60 மூடை என்பதை 80 மூடையாக அதிகரிக்க வேண்டும் என்றார். விவசாயி ராஜேந்திரன்: காங்கேயநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைக்கு ஒருவரை போட்டோ எடுக்கின்றனர். ஆனால் மற்றொருவரை பணிக்கு அழைத்துச் செல்கின்றனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தாசில்தார் சுரேஷ் பேசும்போது, ''விவசாயிகளின் அனைத்து குறைகளும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை