உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கால்வாயில் ஆய்வு

கால்வாயில் ஆய்வு

திருநகர்: திருநகர் சேமட்டான் குளம் கண்மாய்க்கு வைகை அணை தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாய் சீரமைப்பது சம்பந்தமாக நகராட்சி சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.சேமட்டான் குளம் கண்மாய்க்கு வைகை அணை தண்ணீர் வரும் நிலையூர் கால்வாயின் ஒரு பகுதியில் சுகாதாரமற்ற இருப்பதாகவும், சீரமைக்கவும் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமாரிடம் கவுன்சிலர் இந்திரா காந்தி கோரிக்கை வைத்தார்.கமிஷனர் உத்தரவின் பேரில் மண்டல தலைவர் சுவிதா, உதவி கமிஷனர் ராதா, கவுன்சிலர்கள் இந்திரா காந்தி, சுவேதா, உதவி செயற்பொறியாளர் இந்திராதேவி, பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் நிலையூர் கால்வாய், சேமட்டான் குளம் கண்மாயில் ஆய்வு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ