உரக்கடைகளில் ஆய்வு
மதுரை: ராபி பருவம் மற்றும் அக்டோபருக்கான உர இருப்பு குறித்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் மூன்று நாட்கள் ஆய்வு நடக்கிறது. விருதுநகர் வேளாண் துறை உரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் சக்தி கணேஷ் தலைமையில் குழுவினர் கடன் சங்கம், தனியார் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை வேளாண் இணை இயக்குநர் முருகேசன் கூறியதாவது: மதுரையில் இன்று (அக்.16) முதல் 3 நாட்கள் ஆய்வு நடக்கிறது. மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்களுடன் தங்கள் தயாரிப்பு உரங்களையும் சேர்த்து வாங்க வேண்டும் என விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது. மானிய விலை விபரங்களை அறிவிப்பு பலகையில் எழுத வேண்டும். கூடுதல் விலைக்கு விற்றால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம். யூரியாவை பிற பயன்பாட்டுக்கு மாற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.