காப்பு கட்டுதல்
மேலுார்: செம்மினி பட்டி ஆண்டி பாலகர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பிப். 9 விளக்கு பூஜை, பிப்.10 ல் பாலாபிஷேகம் மற்றும் காவடி ஆட்டம் நடைபெறும். பிப். 11 வேல் போடும் நிகழ்ச்சி, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்று பூக்குழி இறங்குவர். குழந்தை வரம் வேண்டி கிடைக்க பெற்றவர்கள் கரும்பாலான தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.