உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெல்லுக்கு ஜன.31க்குள் காப்பீடு அவசியம்

நெல்லுக்கு ஜன.31க்குள் காப்பீடு அவசியம்

மதுரை : அலங்காநல்லுாரில் மூன்றாம் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஜன. 31க்குள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டுத்தொகை செலுத்த வேண்டுமென வேளாண்மை உதவி இயக்குநர் தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 12 வருவாய் கிராமங்களில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு ரூ.534 செலுத்தினால் காப்பீட்டுத்தொகை ரூ.35ஆயிரத்து 600 இழப்பீடாக கிடைக்கும். கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் கடன் சங்கத்தின் மூலமாக காப்பீடு செய்யலாம். வி.ஏ.ஓ.விடம் மூன்றாம் பருவ விதைப்பு சாகுபடி என விதைப்புச்சான்று பெற வேண்டும். சிட்டா அடங்கல், விதைப்புச் சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகலுடன் வங்கி, கூட்டுறவு சங்க கடன் சங்கம், பொது சேவை மையத்தில் ஜன. 31க்குள் காப்பீட்டுத் தொகையை செலுத்தலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !