ஜூலை 25 முதல் 28 வரை மதுரையில் இன்ட் எக்ஸ்போ தொழில் கண்காட்சி
மதுரை: மதுரையில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் மடீட்சியா சார்பில் 6வது 'இன்ட் எக்ஸ்போ' தொழில் கண்காட்சி, ஐடா ஸ்கட்டர் அரங்கில்ஜூலை 25 முதல் 28 வரை நடக்கிறது.மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் வசதியாக்க நிறுவனம் (எம்.எஸ்.எம்.இ.,), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சிட்கோ), தொழில் வணிகத்துறை இயக்குநரகம், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழில் முதலீட்டுக் கழகம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம், இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, மெர்கன்டைல் வங்கிஉள்ளிட்ட நிறுவனங்களின் ஆதரவுடன் இக்கண்காட்சி நடக்கிறது.'ஏசி' அரங்கில் 250 ஸ்டால்கள் அமைகின்றன.இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதுடன் நேரடி செயல்முறை விளக்கமும் அளிக்கப்படுகிறது. சிறுதொழில் நிறுவனங்கள் கடன் பெற வங்கிகள் சார்பில் தனி அரங்குகள் அமையவுள்ளன.பொறியியல், ரப்பர், பிளாஸ்டிக், பேக்கேஜிங், ஏர் கம்ப்ரசர், லேசர் கட்டிங், ஹேன்ட் டூல்ஸ், பேக்கேஜிங் உபகரணங்கள், வாகன உதரிபாகங்கள், கட்டுமான தொழில் உபகரணங்களின் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஸ்டால்கள்அமைக்கின்றனர்.தினமும் காலை 10:30 முதல் இரவு 7:30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். அனுமதி இலவசம். பெறியியல் கல்லுாரி மாணவர்கள் ஜூலை 26, 27, 28ல் மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை பார்வையிடலாம்.ஜூலை 25 காலை 10:25 மணிக்கு மடீட்சியா தலைவர் கோடீஸ்வரன் தலைமையில் எம்.எஸ்.எம்.இ., துறை செயலாளர் அதுல் ஆனந்த் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். கலெக்டர் பிரவீன் குமார் கண்காட்சி மலரை வெளியிடுகிறார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக துணைப் பொது மேலாளர் ரமேஷ், மெர்கன்டைல் வங்கி மண்டலத் தலைவர் ஜெபநாத் ஜீலியஸ் பங்கேற்கின்றனர்.ஏற்பாடுகளை கண்காட்சித் தலைவர் செந்திகுமார் தலைமையில் துணைத் தலைவர்கள் ஜெகபதிராஜன், ராஜமுருகன், முகமது யாசிக்குழுவினர் செய்து வருகின்றனர்.செந்திகுமார் கூறியதாவது: மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு இக்கண்காட்சி ஒரு மைல்கல்லாக அமையும். 30 ஆயிரத்திற்கும் மேல் பார்வையாளர்களுடன் ரூ.400 முதல் 500 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.