உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கு

கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கு

திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் 'ஆற்றல் பயன்பாடுகளுக்கான புதுமையான பொருட்கள்' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தனர். இயற்பியல் துறைத் தலைவர் கவிதா வரவேற்றார். ஜப்பான் தொஹொகு பல்கலை விஞ்ஞானி தகஹிசா ஒமட்டா, சென்னை கிறிஸ்டியன் மகளிர் கல்லுாரி இயற்பியல் துறைத் தலைவர் கிறிஸ்டினா நான்சி பேசினர். உதவிப் பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் ஜெயபாலகிருஷ்ணன் தலைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ