உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதையில் போலீசை தாக்கிய இளைஞர்கள்

போதையில் போலீசை தாக்கிய இளைஞர்கள்

பேரையூர்: பேரையூர் தாலுகா கட்டாரெட்டிபட்டி பஸ் ஸ்டாப்பில் இளைஞர்கள் மது போதையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சாப்டூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றும் சுந்தர் ரோந்து சென்று கொண்டிருந்தார். இளைஞர்கள் சண்டையிட்டதை பார்த்து கலைந்து போக சொன்னார். மது போதையில் இருந்த இளைஞர்கள் போலீசாரை அடித்து உதைத்து பீர் பாட்டிலால் தலையில் குத்தினர். இதில் தலை மற்றும் உடலில் காயமடைந்த சுந்தர் பேரையூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரை தாக்கிய கட்டாரெட்டிபட்டி ராஜகோபால் மகன் கருணா மற்றும் சிலர் தப்பி ஓடினர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ