உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இரிடியம் மோசடியில் முக்கிய புள்ளி சிக்கினார்

 இரிடியம் மோசடியில் முக்கிய புள்ளி சிக்கினார்

மதுரை: இரிடியம் மோசடி வழக்கில் 'மூளையாக' செயல்பட்ட கோவை நபரை கைது செய்தனர். சதுரங்க வேட்டை பட பாணியில், மதுரையை மையமாக வைத்து, இரிடியம் மோசடி கும்பல் தென் மாவட்டங்களில் பண மோசடியில் ஈடுபட்டு வந்தது. 'கோவில் கோபுரம் கலசத்தில் இருந்து எடுக்கப்பட்ட இரிடியத்தை விற்ற பணத்தை, வெளிநாடுகளில் இருந்து இந்தியா கொண்டு வர ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் தருகிறோம்' எனக்கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் அக்கும்பல் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது. இந்த மோசடி வழக்குகளை விசாரித்து வரும் மது ரை சி.பி.சி.ஐ.டி., போலீசார், திண்டுக்கல், சென்னை, வேலுார், மதுரையைச் சேர்ந்த 54 பேரை 2025ல் கைது செய்தனர். இதன்தொடர்ச்சியாக, மோசடிக்கு 'மூளையாக' செயல் பட்ட கோவையைச் சேர்ந்த ஸ்ரீராம் சுந்தர், 35, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை