உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை தண்டாயுதபாணி கோயில் திருப்பணியில் முறைகேடு

மதுரை தண்டாயுதபாணி கோயில் திருப்பணியில் முறைகேடு

மதுரை : மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு நன்கொடையாளர்கள் வழங்கிய ரூ.பல லட்சத்தை கணக்கில் காட்டாமல் ஊழியர் முறைகேடு செய்தது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நன்கொடையாளர்கள் பெயர்களை அறிவிக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.இக்கோயில் திருப்பணிகள் ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. பலரும் நன்கொடைகள் அளித்து வருகின்றனர். சிலர் திருப்பணிகளின் செலவுகளை ஏற்றுக்கொண்டனர். இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட கோயில் ஊழியர், அறநிலையத்துறைக்கு நன்கொடை விபரங்களை தெரிவிக்காமல் ரூ.பல லட்சத்தை மோசடி செய்தார். பின்னர் இதுகுறித்து விசாரித்த அதிகாரிகள், அந்த ஊழியரின் சம்பளத்தில் இருந்து மோசடி தொகையை சில மாதங்களாக பிடித்தம் செய்தனர். போலீசிற்கு புகார் தெரிவிக்காமல் இவ்விவகாரத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மறைத்தது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

ஹிந்து மக்கள் கட்சி புகார்

திருப்பணிகளில் முறைகேடு நடந்ததற்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று ஹிந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன், அறநிலையத்துறை மண்டல இணைகமிஷனர் செல்லத்துரையிடம் புகார் மனு அளித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:திருப்பணிகளுக்காக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட ஏராளமான உபயதாரர்கள் ரூ. 20 லட்சத்திற்கு மேல் வழங்கிய நன்கொடையில் கோயில் ஊழியரான முருகேசன் என்பவர் ரூ.பல லட்சம் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இக்கோயில் அர்ச்சகர்கள் சிலர் மீது புகார் எழுந்துள்ளதால் அவர்களை பணியிட மாற்றம் செய்யவேண்டும். நன்கொடையாளர் பெயர்களை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என இணைகமிஷனரிடம் மனு அளித்தேன். கோயிலில் முறைகேடு நடந்ததை அவர் ஒப்புக்கொண்டதோடு மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி