உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிழற்குடை கிடைக்குமா

நிழற்குடை கிடைக்குமா

சோழவந்தான் : சோழவந்தான் அருகே மேல் நாச்சிகுளத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். சரவணகுமார்: எங்கள் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அருகே பொம்மன்பட்டி, அம்மச்சியாபுரம் பகுதிக்கு பஸ் வசதி இல்லாததால் இங்கு வந்து பஸ்சில் செல்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களும் சென்று வருகின்றனர். நிழற்குடை இல்லாமல் வெயில், மழையில் சிரமப்படுகின்றனர். அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ