புது ரோடு பார்த்து பல வருஷமாச்சு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லுார் பிரிவில் உள்ள முத்தையா நகரில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவிக்கின்றனர். தினேஷ்குமார் கூறியதாவது: ரோடு வசதி இல்லாமல் உள்ளது. தற்காலிகமாக செம்மண் ரோட்டை பயன்படுத்தி வருகிறோம். ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும், ஆங்காங்கே பள்ளங்களுடனும் உள்ள ரோட்டில் சென்று வர சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் வாகனங்கள் வழுக்கி விழுகின்றன.இப்பகுதியில் கழிவு நீர் செல்வதற்கு சாக்கடை வசதி இல்லை. மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாததால் குடியிருப்புகள் நீரில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றார்.