போக்சோ வழக்கில் சிறை
மதுரை:திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் 61. அரசு போக்குவரத்துக் கழக டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் 2021 ல் ஒரு சிறுமி அவரது வீட்டின் முன் விளையாடியபோது பாலியல் தொந்தரவு செய்தார். திருமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி முத்துக்குமரவேல் பிறப்பித்த உத்தரவு: கிருஷ்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.