ஜூலை 14 திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் விடுமுறை
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 14ல் நடப்பதை முன்னிட்டு திருப்பரங்குன்றம்தாலுகாவிற்குட்பட்ட பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அன்று பள்ளி, கல்லுாரிகளில் தேர்வுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள்,தொடர்புடைய பணியாளர்களுக்கு இவ்விடுப்புபொருந்தாது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஜூலை 19 வேலை தினமாக கருதப்படும்.ஜூலை 14 திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட சார்நிலை கருவூலம் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.