காடுபட்டி மாணவிகள் முதலிடம்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளியில் அலங்காநல்லுார் குறுவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.இதில் 19வயது இரட்டையர் வளைய பந்து பிரிவில் காடுபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் கரிஷ்மா, ஆசினி முதலிடம் பிடித்தனர். மைதானம் இல்லா இப்பள்ளியில் இருந்து மதுரையில் நடக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க மானவிகள் தேர்வாகி உள்ளனர்.வெற்றி பெற்ற மாணவிகள், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் வெள்ளைச்சாமி, சந்திரசேகரனை தலைமை ஆசிரியர் சரவணகுமார், ஆசிரியர்கள், பள்ளி வேளாண்மை குழுவினர், கிராம மக்கள் பாராட்டினர்.